இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

vinoth
புதன், 3 ஜூலை 2024 (07:29 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார் பார்த்திபன். இந்த படத்தில் அவர் பதின் பருச இளைஞர்களின் வாழ்க்கையை படமாக்கியுள்ளார்.. படத்துக்கு கேவ்மிக் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் பார்த்திபனே தயாரிக்கிறார். டி இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றது.  படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சக்தி வேல் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தேதியில் கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியின் பிரம்மாண்ட படமான இந்தியன் 2வும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்