‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா சிம்பு?

vinoth
ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (10:40 IST)
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவான பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

நகர்ப்புறங்களில் இந்த படத்துக்கு நல்ல ஆதரவும் கிடைத்தது. ஒரு கார் பார்க்கிங் பிரச்சனையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக இருவரும் என்னென்ன முடிவுகள் எடுக்கிறார்கள், அதன் விளைவுகள் எப்படியெல்லாம் இருவரையும் பாதிக்கின்றன என்பதை விறுவிறுப்பாக சொன்ன படமாக அமைந்தது பார்க்கிங். இதனால் இந்த பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார்.

இதையடுத்து அவர் சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவரின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க வுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் சிம்புவை சந்தித்து கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்