அண்ணாத்த முன்பதிவை அதிகரித்த படையப்பா ஒளிபரப்பு!

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (16:13 IST)
ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து இப்போது முன்பதிவுகள் நடந்துவருகின்றன.

ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொந்தமாக தாங்களே சில பல கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து படத்தை வெளியிடுகிறது. தீபாவளியை முன்னிட்டு நான்காம் தேதி வெளியாகும் இந்த படத்தின் முன்பதிவு இப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக சன் தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஜினிகாந்தின் மெஹா ஹிட் படங்களை இப்போது தங்கள் சேனல்களில் ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துள்ளன. நேற்று மாலை ரஜினியின் படையப்பா திரைப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டது. இந்நிலையில் இதனால் அண்ணாத்த திரைப்படத்தின் முன்பதிவு 23 சதவீதம் அதிகமாகியுள்ளதாக சென்னையில் உள்ள ராம்முத்துராம் சினிமாஸ் தங்கள் சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்