இந்நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் கார்த்தியை இயக்கவுள்ளார். இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு தற்காலிகமாக கார்த்தி 29 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் ரிலீஸான விடுதலை 2 படத்தில் அவரின் நடிப்பு கவனம் பெற்றுள்ளது. இதையடுத்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர் “நான் சூர்யா சார் நடிக்கும் வாடிவாசல் படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.