ஓவியா ஆர்மிக்களே இந்தாங்க உங்களுக்கான இன்பச்செய்தி!

Webdunia
சனி, 8 டிசம்பர் 2018 (18:24 IST)
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, ரசிகர் பிரபலங்கள் என ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்திழுத்து திரைப்படம் ராட்சசன். 


 
இவர் தற்போது சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜெகஜால கில்லாடி ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு. இதில் சிலுக்குவார்பட்டி சிங்கம் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் செல்ல அய்யாவு இயக்குகிறார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்ணுவே இதனைத் தயாரிக்கிறார். இதில் ரெஜினா ஹீரோயினாக நடிக்க, யோகிபாபு, ஆனந்தராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 
 
இந்நிலையில்,  இதன் சிறப்புத் தோற்றத்தில் நடிகை ஓவியா நடித்திருக்கிறார். படத்திற்கு இசை லியோன் ஜேம்ஸ். படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வரும் 21-ம் தேதி வெளியாகிறது. 
 
மேலும் , ஓவியா சிங்கிள் எனப்படும், 'டியோ ரியோ தியா' எனும் பாடலை வரும் 11-ம் தேதி வெளியிடுகிறார்களாம் படக்குழுவினர். 
 
சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட மனதிற்கினிய தோழியும், சிறந்த மனிதாபிமானியுமான ஓவியாவிற்கு நன்றி என ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் விஷ்ணு, ஓவியா ஆர்மியினரே தயாராக இருங்கள் எனத் தெரிவித்திருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்