விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகத ராஜா என்ற திரைப்படம் கடந்த 2012 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த பல ஆண்டுகளாக இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய விஷால் மற்றும் சுந்தர் சி பல முயற்சிகள் செய்தனர். இருப்பினும், இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாததால் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய விஷால் தீவிர நடவடிக்கை எடுத்தார். தற்பொழுது, இந்த படத்திற்கு நல்ல காலம் வந்துள்ளது. வரும் பொங்கல் தினத்தில் மதகத ராஜா ரிலீஸ் ஆகும் என்று புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகி உள்ளதால், விஷால் மற்றும் சுந்தர் சி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான மத கஜ ராஜா படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.