இளைஞர்களைக் கவர்ந்த ஒன்ஸ்மோர் பட கிளிம்ப்ஸ்… 2.3 மில்லியன் பார்வைகள்!

vinoth
புதன், 16 அக்டோபர் 2024 (09:40 IST)
கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். இதையடுத்து அதே தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் மீண்டும் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படத்தைத் தயாரித்தது. அந்த படமும் சுமாரான வெற்றியைப் பெற்றது.


இந்நிலையில் இப்போது இந்த நிறுவனம் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகும் படத்தைத் தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு பழைய விஜய் பட டைட்டிலான ஒன்ஸ்மோர் என்பது டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. காதல் ஆசை இல்லாத இருக்கமான ஆணுக்கும் அவனை காதலிக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை மையப்படுத்தியதா இருக்கும் என தெரிகிறது.

படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. இந்த டீசர் 2.3 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப் பெற்று கவனம் ஈர்த்துள்ளது. இதனால் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்