சினிமா ஷூட்டிங்கில் ஒலிமாசை ஒலிப்போம் - சூர்யா பட இயக்குனர் டுவிட்

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (16:22 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா. இவர் கார்த்தி நடிப்பில் சிறுத்தை, அஜித்துடன் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என 'v' வரிசை ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

கடந்தாண்டு இவர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இப்படத்தை அடுத்து, தற்போது சூர்யா-42 படத்தை இயக்குகிறார்.

இந்த நிலையில், இன்று இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு  பதிவிட்டுள்ளார். அதில், திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் வெளிப்புற ஸ்டுடியோ தளங்களில் சுற்றுசூழலுக்கு இணக்கமாக ஒலி மாசு அற்ற பகுதியாக மாற்ற நாம் உறுதி எடுப்போம். அதைச் சாத்தியப்படுத்த அதிக சத்தம் எழுப்பும் ஒலி எழுப்பிகளை படப்பிடிப்பு தளங்களில் தவிர்த்து படக்குழுவினருக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாமல் காப்போம். ஒலி மாசை ஒழிப்போம் என பதிவிட்டுள்ளார். இப்பதிவுக்கு அருகில் ஒலி மாசு பற்றி டாக்டர் பாண்டியனின் பதிவும் இடம்பெற்றுள்ளது.

இது ரசிகர்களின் கவனைத்தைப் பெற்று வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்