’சூர்யா 42’ படத்தின் பூஜை இன்று: படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!

ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (09:17 IST)
’சூர்யா 42’ படத்தின் பூஜை இன்று: படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
சூர்யா நடிக்க இருக்கும் சூர்யா 42 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்று வருவதாகவும் இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்துக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
மேலும் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த முழு தகவல்களும் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதன்படி இந்த படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் என்றும், ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி என்றும், கலை இயக்குனர் மிலன் என்றும், இயக்குனர் சுப்ரீம் சுந்தர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இந்த படத்தின் கதையை ஆதிநாராயணன் எழுதுகிறார் என்றும், வசனத்தை மதன் கார்க்கி எழுதுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தின் திரைக்கதை மற்றும் இயக்கம் மட்டுமே சிறுத்தை சிவா செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்