அஜித்தின் 61வது படம் மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.