என்னது நான் கர்ப்பமா?... அப்படியே பிரசவ தேதியும் சொல்லிடுங்க… நிக்கி கல்ராணி ஷாக்!

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (08:59 IST)
நட்சத்திர ஜோடிகளான ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோரின் திருமணம் கடந்த மே மாதம் நடந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். முதலில் இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வந்த போது அதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.

அதன் பின்னர் இருவருக்கும் சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் அவர்கள் இருவரும் தெலுங்கு முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதையடுத்து இப்போது திடீரென நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவின. அதற்கு பதிலளித்த நிக்கி “எனக்கே தெரியாமல் நான் கர்ப்பமாக இருப்பதாக வைரலாக தகவல்கள் பரவி வருகின்றன. அப்படியே பிரசவ தேதியையும் சொல்லிவிடுங்கள்” என ஜாலியாகக் கூறியுள்ளார்.

மேலும் அவர் “நான் கர்ப்பமாக இல்லை. எதிர்காலத்தில் அந்த செய்தியை முதலில் பகிரும் நபர் நானாகதான் இருப்பேன்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்