திடீரென தமிழில் ட்விட் செய்த உத்தரபிரதேச முதல்வர்: என்ன சொல்லியிருக்கார்?

வியாழன், 17 நவம்பர் 2022 (14:40 IST)
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் திடீரென தமிழில் ட்விட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டில் கூறியிருப்பதாவது:
 
காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாச்சாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான்.
 
'காசி தமிழ் சங்கமம்' ஆனது இந்த 'ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம்.
 
அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு.
 
பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் 'காசி-தமிழ் சங்கமம்' விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு. இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் 'ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்' உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும்.
 
இந்த நிகழ்வு இந்தியாவின் கலாச்சார நாகரிகத்தில் 'ராம சேது' போலவே இருக்கும்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்