மார்ச் மாதம் வெளியாகும் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (10:52 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி, அருண்ராஜா காமராஜ் இயக்கி வரும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது மொத்தமாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. விரைவில் ரிலிஸுக்கான பணிகள் தொடங்க உள்ளன.

உதயநிதி சட்டமன்ற உறுப்பினராக ஆனதற்குப் பின்னர் வெளியாக உள்ள முதல் திரைப்படம் என்பதால் இதன் மீது பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம். இந்நிலையில் படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்