ஜெயிலருக்குப் பிறகு நெல்சனின் அடுத்த படம் இதுவா? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
ஞாயிறு, 29 அக்டோபர் 2023 (08:13 IST)
சின்னத்திரையில் இருந்து வந்து இன்று கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக நான்கே படங்களில் உயர்ந்துள்ளார் நெல்சன். அவர் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் ஜெயிலர் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது. இதையடுத்து அவரின் அடுத்த படம் எந்த ஹீரோவுடன் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நெல்சன் அடுத்து இரண்டு படங்களை தொடங்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தனுஷுக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருந்தார். அதே போல இப்போது கோலமாவு கோகிலா 2 வை எடுக்கலாமா என்ற யோசனையிலும் உள்ளாராம். இந்த இரண்டு படங்களில் ஒன்றைதான் அவர் அடுத்து இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்