தலைவர் 170 படத்தில் அமிதாப் நடிக்க யார் காரணம்? லேட்டஸ்ட் தகவல்!

வியாழன், 26 அக்டோபர் 2023 (07:42 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இன்று முதல் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடந்து முடிந்த நிலையில் இப்போது இரண்டாம் கட்ட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. அங்கு அமிதாப் பச்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. 32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்தும் , அமிதாப் பச்சனும் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன்தான் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் வலியுறுத்தியதாகவும், அது சம்மந்தமாக தானே அமிதாப்பிடம் பேசி சம்மதம் வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்