கைது செய்யப்பட்ட விநாயகன் ஜாமீனில் விடுவிப்பு!

வியாழன், 26 அக்டோபர் 2023 (14:03 IST)
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விநாயகன். தமிழிலும் திமிரு மற்றும் மரியான் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் விநாயகன் வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய பங்கும் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளார். 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் விநாயகன் கேரள மாநில போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர் இப்போது விநாயகன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கைது குறித்து பேசிய விநாயகன் “தன்னை ஏன் கைது செய்தார்கள் என்றே தெரியவில்லை” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்