லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் என்றேன்… ஆனால்?...- நயன்தாரா அளித்த விளக்கம்!

vinoth
வியாழன், 12 டிசம்பர் 2024 (14:49 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக லேடி சூப்பர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். மலையாள படமான மனசினகரே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அதன் பின்னர் தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியான அவர் அதன் பின்னர் முன்னணி நடிகையாகி முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடித்தார். அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கி புகழ் வெளிச்சத்தில் இருந்த நயன்தாராவுக்கு வெற்றிப் படங்களும் தொடர்ந்து அமைந்தன.

மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.  சமீபத்தில் அவரின் திருமண ஆவனப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியதும் அதையொட்டி எழுந்த சில சர்ச்சைகளும் அவரை மீண்டும் பேசுபொருளாக்கின.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தான் லேடி சுப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் சில ஆண்டுகளாகவே அந்த பட்டம் வேண்டாம் என சொல்லி வருகிறேன். அந்த பட்டத்தால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என எனக்குத் தெரியும்.  ஆனால் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக அப்படி அழைத்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்