மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். சமீபத்தில் அவரின் திருமண ஆவனப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியதும் அதையொட்டி எழுந்த சில சர்ச்சைகளும் அவரை மீண்டும் பேசுபொருளாக்கின.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தான் லேடி சுப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் “நான் சில ஆண்டுகளாகவே அந்த பட்டம் வேண்டாம் என சொல்லி வருகிறேன். அந்த பட்டத்தால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை என எனக்குத் தெரியும். ஆனால் ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பு காரணமாக அப்படி அழைத்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.