வெளியானது நயன்தாராவின் கொலையுதிர் காலம் டிரெய்லர்!

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (20:45 IST)
நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கும் கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதைதொடர்ந்து சைரா நரசிம்ம ரெட்டி, லவ் ஆக்‌ஷன் ட்ராமா, தளபதி 63, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்கள் இவரது கைவசம் உள்ளது.  
 
வுமன் சென்ட்ரிக் படமான இதில் நடிகை பூமிகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை பூஜா எண்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா எண்டெர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.  
 
சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் படம் அடுத்தாண்டு வெளியாகும் என நயன்தாராவின் பிறந்தநாளன்று அறிவிக்கப்பட்டது. தற்போது டிரெய்லர் வெளியாகி திகிலை கிளப்பியுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்