நயன்தாராவின் ஸ்டைலிஷ் லுக்: வைரலாகும் புகைப்படங்கள்!

செவ்வாய், 19 மார்ச் 2019 (18:03 IST)
தமிழ் திரையுலகில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நயன்தாரா. சமீப காலமாக இவரது வளர்ச்சி அபரிவிதமாகிவிட்டது.
 
 
இந்த ஆண்டு அஜித்துடன் நயன்தாரா நடித்த விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நயன்தாராவின் அடுத்த வெற்றிப்படமாக ஐரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் உள்ள நயன்தாராவின் ஸ்டைலிஷ் லேடஸ்ட் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்