பாகுபலி வெப்சீரிஸில் நயன்தாரா...ரூ.200 கோடி பட்ஜெட்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (18:54 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா பாகுபலி வெப்சீரிஸில் நடிக்கவுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும்  ராணாம், அனுஷ்கா,சத்யராஜ், நாசர், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் பாகுபலி. உலகளவில் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் 2 ஆம் பாகமும் வெற்றி பெற்றது.

இப்படத்தில், சிவகாமி தேவி ராஜமாதாவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ரம்யாகிருஷ்ணன்.

வீரமிக்கதாகவும், பேராண்மை உள்ளதாகவும் இருந்த அரசியான அப்பாத்திரத்தின் இளம் வயது வாழ்க்கை தற்போது வெப் சீரிஸீக்காக ரூ.200 கோடி செலவில் தயாராகவுள்ளது.

இதுவரை வெப் சீரியஸில் நடிக்காமல் இருந்த  நயன்தாரா தற்போது இதில் நடிக்க சம்மதித்துள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸிக்கு எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்