சுஹாசினியை ஆம்பள மூஞ்சி என சொல்லி வாங்கி கட்டிய விமர்சகர்!

திங்கள், 12 ஜூலை 2021 (15:50 IST)
நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சுஹாசினியிடம் திட்டு வாங்கிய அனுபவத்தைக் கூறியுள்ளார்.

சினிமா நகைச்சுவை நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர் நடிகைகளைப் பற்றிய கிசுகிசுக்களைப் பேசி அதன் மூலம் யுட்யுப் சேனல்களில் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறார். இவர் பேசும் கிசுகிசுக்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை சம்மந்தமான செய்திகளுக்காக இவருக்கு ஒரு பெரிய பாலோயர்ஸ் கூட்டம் உள்ளது.

அதே போல இவர் சினிமா பத்திரிக்கையாளராக இருந்த போதும் பலபேரிடம் திட்டு மற்றும் அடி வாங்கிய சம்பவங்களும் உண்டு. அப்படி நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சுஹாசினி நடிக்க வந்த போது அவரை ஆம்பள மூஞ்சி மாதிரி இருப்பதாக பத்திரிக்கைகளில் எழுதியுள்ளார். அதன் பின்னர் ஒரு நிகழ்ச்சியில் சுஹாசினியை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த போது ’நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள்’ என ப்ளேட்டை மாற்றிப் போட்டுள்ளார். ஆனால் அவர் எழுதிய விமர்சனத்தை படித்த சுஹாசினி அவரைக் கடுமையாக திட்டினாராம். இதை அவரே சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்