சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (07:58 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக லேடி சூப்பர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். மலையாள படமான மனசினகரே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா அதன் பின்னர் தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியான அவர் அதன் பின்னர் முன்னணி நடிகையாகி முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் படங்களில் நடித்தார். அடிக்கடி காதல் கிசுகிசுக்களில் சிக்கி புகழ் வெளிச்சத்தில் இருந்த நயன்தாராவுக்கு வெற்றிப் படங்களும் தொடர்ந்து அமைந்தன.

மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து லேடி சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.  சமீபத்தில் அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி ரிலீஸானது. இப்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்