சைலண்டாக கிருத்திகா உதயநிதி படத்தின் ஷூட்டிங்கை முடித்த ஜெயம் ரவி!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (07:12 IST)
ஜெயம் ரவி நடிக்கும் 33 வது திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் ஷூட் செய்யவேண்டி உள்ளதாகவும், அதை வரும் பிப்ரவரி மாதத்தில் ஷூட் செய்ய உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்