இதையடுத்து நயன்தாராவின் சமீபத்தைய ரிலீஸாக அவரின் 75 ஆவது படமான அன்னபூரணி திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படம் மோசமான திரைக்கதை மற்றும் சென்னை வெள்ளம் உள்ளிட்ட பல காரணங்களால் படுதோல்வி அடைந்தது. இந்த படத்துக்கு நயன்தாராவின் சம்பளம் 10 கோடி ரூபாயாம். சம்பளத்தை அடுத்தடுத்த படங்களுக்கு ஏற்றி வந்தாலும், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் படங்களின் கலெக்ஷன் அடிவாங்கிக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.