நடராஜன் பயோபிக்கில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2022 (16:35 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்திய அணிக்காக சில போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்திய அணிக்காக சில போட்டிகளே விளையாடி இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த வீரராக இருந்தார் நடராஜன். ஐபிஎல் மூலம் கிடைத்த வெளிச்சத்தில் இந்திய அணிக்குள் நுழைந்த அவர் சிறப்பாக செயல்பட்ட போதும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு அவரின் காயங்களும் முக்கியக் காரணமாக அமைந்தன.

இந்நிலையில் நடராஜனின் கிரிக்கெட் எண்ட்ரியை கொண்டாடிய தமிழக ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி செய்தியாக இப்போது அவரின் பயோபிக் தமிழில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதில் நடராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்