சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி மற்றும் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்திருக்க மேலும் பிஜு மேனன், வித்யூத் ஜம்வால், , விக்ராந்த், ஷபீர் கல்லரைகல், பிரேம் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த மெகா பஜெட் படத்தை சுமார் ₹200 கோடி செலவில் உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் வந்த அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்குச் சிறப்பான வெற்றியைத் தந்தது. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக, 'மதராஸி' திரைப்படமும் வசூலில் கலக்கும் என ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்கள் பெரிதும் நம்புகின்றனர்.