‘நாடோடிகள் 2’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது!

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (19:04 IST)
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘நாடோடிகள் 2’ படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது.

 
சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘நாடோடிகள்’. 2009ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில், விஜய் வசந்த், பரணி, அபிநயா, அனன்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருந்தனர். காதலர்களைச் சேர்த்து வைக்கும் நண்பர்களைப் பற்றிய கதை இது.
 
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. சசிகுமார் ஹீரோவாக நடிக்க, அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்கிறார் சமுத்திரக்கனி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரையில் தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்