என்னப்பா ராசா பிரச்சனை: வைரமுத்துவுக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, பா.ரஞ்சித்!

வெள்ளி, 12 ஜனவரி 2018 (16:14 IST)
கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதுறாக கூறியதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
கவிஞர் வைரமுத்து தனது கட்டுரையில் ஆய்வாளர் ஒருவர் ஆண்டாளை தேவதாசி என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இதனை பாஜகவின் எச்.ராஜா மிகவும் பூதாகரமான பிரிச்சனையாக மாற்றி வைரமுத்துவை மன்னிப்பு கேட்க வைத்தார்.
 
வைரமுத்து மன்னிப்பு கேட்டபின்னரும், தனது கருத்து குறித்து பல்வேறு தெளிவான விளக்கங்கள் கொடுத்த பின்னரும் பாஜகவினர் விடாமல் வைரமுத்துவை விமர்சித்து வருகின்றனர். அவர்களது விமர்சனங்கள் நாகரிகமற்ற முறையில் உள்ளனர்.
 
இந்நிலையில் இந்த பிரச்சனையில் கொஞ்சம் கொஞ்சமாக வைரமுத்துவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. பிரபல மூத்த இயக்குனர் பரதிராஜா, எச்.ராஜாவை சாடி வைரமுத்துவுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
 
இந்த வீடியோவை பகிர்ந்த இயக்குனர் சமுத்திரக்கனி என்னப்பா ராசா என்ன உனக்கு பிரச்சனை என கிண்டலடித்தார். மேலும் இயக்குனர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், எச்.ராஜாவின் மோசமான வசைப் பேச்சுக்குக் கண்டனம் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்