இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து அறிவிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (10:13 IST)
பிரபல இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த இமான் அவர்களுக்கும் மோனிகா ரிச்சர்ட் என்பவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்வதாகவும் இனி நாங்கள் சட்டபூர்வமாக கணவன் மனைவி இல்லை என்றும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தொடர அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் டி இமான் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்