சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார்? கண்டுபிடித்து தர மனைவி புகார்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (08:25 IST)
நேற்று மாலை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறு புலனாய்வுத்துறை காவல்துறையிடம் அவரது மனைவி மாதரசி என்பவர் புகார் அளித்துள்ளார்
 
சமீபத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக ஆயிரக்கணக்கான பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே போராட்டம் நடத்திய நிலையில் இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூகவலைதளத்தில் சாட்டை துரைமுருகன் கூறியதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் ஆனால் அவர் எங்கே உள்ளார் என்பது தெரியவில்லை என்றும் அவரது மனைவி மாதரசி புகார் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே அவரை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்