அரசு பள்ளியை தவறாக காட்டுவதா? வேட்டையன் படத்திற்கு எதிர்ப்பு! - தியேட்டரை முற்றுகையிட்ட மக்கள்!

Prasanth Karthick
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (13:34 IST)

கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியை ‘வேட்டையன்’ படத்தில் தவறாக சித்தரித்ததாக கூறி மக்கள் திரையரங்கத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

 

 

ரஜினிகாந்த் நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் வேட்டையன். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நேற்று வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

 

இந்நிலையில் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்த அரசு பள்ளியின் பெயர் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக கோவில்பட்டியில் வேட்டையன் திரையிடப்பட்ட லெட்சுமி தியேட்டரை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்தது.
 

ALSO READ: புளோரிடாவைபுரட்டிஎடுத்தமில்டன்புயல்..10பேர்பரிதாபபலி..!
 

உடனடியாக அங்கு விரைந்த காவல் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அளித்த வாக்குறுதியின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. வேட்டையன் வெளியாகி இரண்டு நாட்களே ஆகியுள்ள நிலையில், படத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்