'மாயவன்' ரிலீஸ் திடீர் ஒத்திவைப்பு! 'விவேகம்' காரணமா?

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2017 (08:20 IST)
அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களையும் மீறி திரையரங்குகளில் 75%க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் ஓடி வருகிறது. இந்த படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்குகளும் படத்தை தூக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டாவது வாரத்திலும் இந்த படத்தை தொடர திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் இந்த வாரம் அதாவது செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது



 
 
குறிப்பாக சி.வி.குமாரின் 'மாயவன் திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் பெரிய தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
 
சந்தீப்கிஷான், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், அக்சரா கெளடா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்