விஜய் விஜய்சேதுபதி ரசிகர்களை ஏமாற்றிய மாஸ்டர் படத்தின் அடுத்த போஸ்டர்

Webdunia
புதன், 15 ஜனவரி 2020 (12:10 IST)
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் மொத்த வியாபாரமும் முடிவடைந்துவிட்டது
 
வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் செகண்ட் லுக் வெளியாகும் முன்னரே பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருடன் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்
 
இந்த போஸ்டரில் விஜய், செய்து விஜய்சேதுபதி தவிர இந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய பிரபலங்கள் அனைவரும் உள்ளனர். இதனால் விஜய், விஜய்சேதுபதி ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இருப்பினும் இன்று மாலை 5 மணிக்கு தளபதி விஜய் ரசிகர்கள் திருப்தி அடையும் வகையில் அட்டகாசமான போஸ்டர் வெளியாகவிருப்பதாகவும், எனவே ரசிகர்கள் யாரும் எங்களை திட்ட வேண்டாம் என்றும் இயக்குனர் ரத்னகுமார் சமாதானம் செய்துள்ளார். இவர் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்