ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா - மாரி செல்வராஜ் இரங்கல்

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (17:29 IST)
தெரு கூத்து கலைஞர் நெல்லை தங்கராஜ் அவர்களுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான தெரு கூத்து கலைஞர் நெல்லை  தங்கராஜ் பாளையம்கோட்டை மார்கெட் பகுதியில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து வந்தவர். 
 
இவருக்கு வாழ்கையில் பல கஷ்டங்களுக்கு பிறகு பரியேறும் பெருமாள் படத்தில் பெண் வேடமிட்டு ஆடும் தெருக்கூத்து கலைஞராக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  அவரது நடிப்பு பலரையும் மெய்சிலிர்க்கவைத்தது. காலத்தால் அழியாத காட்சியாக அது பார்க்கப்பட்டது. 
 
அவருக்கு சமீபத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தமிழக அரசு சார்பில் இலவச வீடு வழங்கினார். இந்நிலையில் நெல்லை தங்கராஜ் இன்று காலை 5 மணிக்கு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
 
இதையடுத்து அவருக்கு திரையுலகத்தை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார். இயக்குனர் மாரி செல்வராஜ், ஆங்காரமாய் ஆடியது போதும் இளைப்பாறுங்கள் அப்பா. என் கடைசி படைப்பு வரையிலும் உங்கள் பாதச்சுவடிருக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்