’மன்மதன் 2’ முழுக்க முழுக்க வதந்தி: சிம்பு தரப்பினர் விளக்கம்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (19:31 IST)
நடிகர் சிம்பு தற்போது உடலை குறைத்து புத்துணர்ச்சியுடன் திரும்பி உள்ளதை அடுத்து அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். இதனையடுத்து சுமார் எட்டு இயக்குனர்கள் இதுவரை அவரிடம் கதை கூறியிருப்பதாகவும் அடுத்தடுத்து சிம்பு நடிக்க உள்ள திரைப்படங்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே சிம்பு நடித்து முடித்துள்ள ’மகா’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் வரும் பொங்கலன்று ’ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் அடுத்த ஆண்டிற்குள் ’மாநாடு’ திரைப்படமும் ரிலீஸுக்கு தயாராகி விடும் 
 
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மாதங்களில் சிம்பு சுமார் ஐந்து படங்களில் ஒப்பந்தம் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிம்பு நடித்த ’மன்மதன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அந்த படத்தை சிம்புவே இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்றும் ’மன்மதன் 2’ படத்தில் நடிக்கவோ அல்லது இயக்குவவோ சிம்புவுக்கு இப்போதைக்கு ஐடியா இல்லை என்றும் சிம்பு தரப்பில் இருந்து தெரிவித்துள்ளனர். எனவே ’மன்மதன் 2’ குறித்து சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றே தற்போது கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்