அஜித் பல தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷன்… நடிகர் மணிகண்டன் பேச்சு!

vinoth
வெள்ளி, 17 ஜனவரி 2025 (14:25 IST)
தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். ஏற்கனவே இந்த சேனலில் இருந்து தனம் அம்மாள், பிரசன்னா, உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.

இந்நிலையில் இப்போது இந்த குழுவினர் இணைந்து உருவாக்கும் குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார். இந்த படத்தில் மேக்னா சான்வே கதாநாயகியாகவும் , இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சமீபத்தில் பாடல் ஒன்று ரிலீஸாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் ஆடியோ வெளியீடு கோயம்புத்தூரில் நடந்தது. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மணிகண்டன் “அஜித், பல தலைமுறைகளுக்கு உத்வேகமாக இருந்தவர். அவர் என்றுமே தன்னுடைய passion- ஐக் கைவிட்டதில்லை. அதற்கான பலன்கள் கிடைப்பதைப் பார்க்கையில் இன்னும் உத்வேகமாக உள்ளது. நம் இலக்குகளை அடையக் கடினமாக உழைத்தால் ஒருநாள் நமக்கு வெற்றிக் கிடைக்கும் என்பதற்கு அவர் உதாரணமாக உள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்