பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமை குறித்த லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:52 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆக உள்ளது.

மறைந்த எழுத்தாளர் கல்கி 70 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

ரிலீஸூக்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. சமீபத்தில் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி படத்தின் இரு பாகங்களையும் அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் சுமார் 125 கோடிக்கு வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தொகை சினிமா வட்டாரத்தில் ஆச்சர்யப்படும் அளவுக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்