பொன்னியின் செல்வன் மேடை… அந்த பாட்டைக் கேட்டதும் உற்சாகமாகி ஆட்டம் போட்ட திரிஷா & சித்தார்த்!

வியாழன், 8 செப்டம்பர் 2022 (08:44 IST)
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு நடந்தது.

அப்போது விழா மேடையில் மணிரத்னம்- ரஹ்மான் கூட்டணியில் உருவான படங்களின் ஹிட் பாடல்கள் பாடப்பட்டன. அப்போது ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம்பெற்ற யாக்கை திரி பாடல் ஒளிபரப்பான போது அந்த பாடலில் நடனமாடிய சித்தார்த் மற்றும் த்ரிஷா ஆகிய இருவரும் விழா மேடையில் உட்கார்ந்த படியே கைகால்களை ஆட்டி அந்த பாடலை ரசித்தனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்