ஒரு நீதி… ஒன்பது சாதி- மண்டேலா பாடல் வைரல்!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (09:00 IST)
யோகி பாபு நடித்துள்ள மண்டேலா திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

தர்மபிரபு படத்துக்குப் பிறகு யோகிபாபு மண்டேலா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல இயக்குனர் பாலாஜி மோகன் புதிதாக ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.  இந்த படத்துக்கான பைனான்ஸை ஒய்நாட் ஸ்டூடியோஸ் நிறுவனர் சசிகாந்த் செய்துள்ளார். இந்தப்படத்தை புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் இயக்குகிறார். இந்த படத்தின் பிரதானக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் சசிகாந்த் தயாரித்த ஏலே திரைப்படம் நேரடியாக விஜய் தொலைக்கட்சியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஒரு நீதி ஒன்பது சாதி என்ற பாடலை நேற்று இணையத்தில் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டார். சில மணிநேரங்களிலேயே இந்த பாடல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மீண்டும் கேட்க தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்