கார்த்திக் சுப்பராஜை ஆஹோ ஓஹோ என புகழ்ந்த தனுஷ்!

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (08:55 IST)
கார்த்திக் சுப்பராஜின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த நடிக ர் தனுஷ் தான் பணியாற்றியதிலேயெ சிறந்த இயக்குனர் எனக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இன்று தனது 38 வது பிறந்தநாள் தினத்தைத் கொண்டாடிவருகிறார். அவருக்கு சினிமாத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். தமிழ் சினிமாவில் ஜிகிர்தண்டா, மெர்குரி, பீஸா, பேட்ட போன்ற படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய 38 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்த தனுஷ் ‘என்னை இயக்கிய இயக்குனர்களில் சிறந்த இயக்குனர்’ எனக் கூறியிருந்தார். தனுஷை உருவாக்கிய செல்வராகவன், அடுத்தெ லெவலுக்குக் கொண்டு சென்ற வெற்றிமாறன் எல்லாம் இருக்கும்போது கார்த்திக் சுப்பராஜை சிறந்த இயக்குனர் என தனுஷ் சொன்னது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்