இந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும், முதன்மை ஓட்டுனராகவும் அஜித் செயல்பட, ஃபேபியன் ட்யூபிக்ஸ், மேத்யூ டெய்ட்ரி மற்றும் கேம் மெக்லார்ட் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இந்நிலையில் துபாயில் ரேஸுக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்ட போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆனால் அவர் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவருக்குப் பெரிய அடி எதுவும் படவில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் அணி உறுப்பினர்களில் ஒருவரான பேபியன் “அஜித் காயங்கள் இன்றி நலமாக இருக்கிறார். என்றுமே மேலும் கற்பதற்கான பயணம் முடியாது என்பதற்கான நினைவூட்டலாக அந்த சம்பவம் இருந்தது. இடையூறுகள் இருந்தாலும் ரேஸிங் மீதான ஆர்வம் ஒவ்வொன்றில் இருந்து கற்றுக்கொள்ளவும் முன்னேறிச் செல்லவும் உத்வேகமாக உள்ளது. பாடங்கள் நிறைந்த இந்த பாதையை ஒரு குடும்பமாகவும் அணியாகவும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” எனக் கூறியுள்ளார்.