காதல், கல்யாணம் பற்றிய இன்றைய இளைஞர்களின் பார்வையை அலசுகிறதா காதலிக்க நேரமில்லை?… டிரைலர் எப்படி?

vinoth

புதன், 8 ஜனவரி 2025 (09:25 IST)
ஜெயம் ரவியின் 33 வது திரைப்படமான ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கிருத்திகா உதயநிதி இயக்கிமுடித்துள்ளார். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ,  லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் இணைந்த படங்களில் இந்த படமும் ஒன்று. ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.

இணையத்தில் டிரைலர் கவனத்தை ஈர்த்து வருகிறது. திருமணத்தை விரும்பாமல் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்ணாக நித்யா மேனன் நடித்துள்ளார். மற்றொரு புறம் ஒரு பெண்ணோடு காதலில் இருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரம் அவருடனான கெமிஸ்ட்ரியை உணராமல் நித்யா மேனன் பாத்திரத்தின் மேல் ஈர்ப்பு கொள்வது போலவும், இவர்களுக்குள்ளான மோதல் மற்றும் காதல் பயணமே ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்