மகத்-பிராய்ச்சி சந்திப்பு! என்ன நடந்தது தெரியுமா?

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (17:13 IST)
நடிகர் மகத் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே பிராய்ச்சி மிஸ்ரா என்ற பெண்ணை காதலித்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகாவையும் காதலிப்பதாகவும், இந்த பிரச்சனைக்கு கடவுள்தான் நல்ல முடிவு தரவேண்டும் என்றும் கூறினார். ஆனால் யாஷிகா காதல் என்ற ஆயுதத்தை வைத்து அவரை பயன்படுத்தி கொண்டதை அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர்தான் தெரிந்து கொண்டார்

இந்த நிலையில் யாஷிகா மீது காதல் கொண்டதாக கூறியதால் பிராய்ச்சி ஆத்திரத்துடன் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து பின்னர் அந்த பதிவை அவர் டெலிட் செய்துவிட்டார்.

இந்த நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த மகத், பிராய்ச்சியை சந்தித்துள்ளார். இருவரும் கட்டிப்பிடித்து சந்தோஷமாக இருக்கும் புகைப்படத்தை மகத் வெளியிட்டுள்ளதால் மகத்தை பிராய்ச்சி மன்னித்து ஏற்றுக்கொண்டதாகவே கருதப்படுகிறது. எப்படியோ பிக்பாஸ் வீடு ஒரு மிகப்பெரிய பாடத்தை மகத்துக்கு கற்றுக்கொடுத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்