இமைக்கா நொடிகள்' ரிலீஸ்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (16:35 IST)
நயன்தாரா, விஜய்சேதுபதி, அதர்வா, ராஷிகண்ணா உள்பட பலர் நடித்த 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் இன்று முதல் வெளியாகவிருந்தது. இந்த படத்திற்கான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் இருந்தது

இந்த நிலையில் இந்த படத்தின் இன்றைய காலைக்காட்சி திடீரென ரத்து செய்யபப்ட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் மதிய காட்சியும் ரத்து செய்யப்பட்டதால் படக்குழுவினர்களும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை ஐகோர்ட் இந்த படத்தை வெளியிட நிபந்தனைகளுடன் அனுமதித்துள்ளது. இதனால் இன்று மாலை இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

முன்னதாக இமைக்கா நொடிகள்’ படத்தை தயாரித்த கேமியோ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்  இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஸ்ரீகிரீன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மினிமம் கேரண்டி அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த  படத்தின் விநியோக உரிமை பெற்ற ஸ்ரீகிரீன் நிறுவனம், அப்படத்தின் செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதிகளுக்கான விநியோக உரிமையை ஆர்.வி.மீடியா என்ற நிறுவனத்துக்கு 4 கோடி ரூபாய்க்கு வழங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்தப படத்தை ஸ்ரீகிரீன் நிறுவனம் தனது நிறுவனத்தின் விநியோகஸ்திலேயே, இன்று முதல் படம் வெளியாகும் என விளம்பரம் செய்யப்படதால்  அதிர்ச்சியடைந்த ஆர்.வி.மீடியா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்