தளபதி 65 படத்தில் விஜய் ஜோடியாகும் முன்னனி கதாநாயகி!

Webdunia
சனி, 6 ஜூன் 2020 (10:23 IST)
தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்றுள்ளது. இதற்கிடையில் விஜய் தலத்து அடுத்து படத்தின் வேலைகளால் மும்முரமாக இறங்கியுள்ளாராம்.

ஆம், மாஸ்டர் படத்தை கொண்டாடுவதற்கு முன்னதாகவே விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. விஜய்யை வைத்து கத்தி , துப்பாக்கி ,சர்க்கார் போன்ற படங்களை இயக்கி மாபெரும் வெற்றி படைத்த இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது மீண்டும் தளபதி 65 படத்தை இயக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை ம
 
டோனா ஜெபஸ்டின் நடிக்கவிருபாதக தகவல் கசிந்துள்ளது. ஆனால், இது குறித்து உறுதியாக தகவல் இன்னும் கிடைவில்லை. இருந்த போதிலும் தெலுங்கு சினிமாவின் தற்போதைய டாப் இசையமைப்பாளரான தமன் தளபதி 65ல் ஒப்பந்தம் ஆகி இருப்பதை அதிகாரபூர்வமாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்