ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அத்துடன் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.
பாபா படம் ரிலீஸான பின்னர் ரஜினிகாந்த் தன்னுடைய சுயசரிதையை எழுதத் தொடங்கினார். அவருடன் இணைந்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் எழுத்துப் பணிகளை மேற்கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த பணிகளைக் கைவிட்டார் ரஜினிகாந்த். சுயசரிதை எழுதினால் காந்தி மாதிரி அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடவேண்டும். என்னால் அப்படி சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை என சுயசரிதை குறித்து முன்பொரு முறை ரஜினிகாந்த் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.