ஜூன் 9ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் - முதல்வர் பினராயி விஜயன்

வெள்ளி, 5 ஜூன் 2020 (20:00 IST)
கேரள மாநிலத்தில் கொரொனா வைரஸால் இதுவரை 1,500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரொனா வைரஸால் மக்கள் பாதிக்கபடக் கூடாது என அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனவும் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் 50 பேர் வரை வழிபாடு செய்ய அனுமதிப்படுவர் என  முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஜூன் 9ம் தேதி முதல் மால்கள், உணவகங்களும் திறக்கப்படும் என அவர்  தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்