என்னுடைய பிறந்த நாளில் பேரன்பை வாழ்த்துகளாக தெரிவித்து அதை மறக்கமுடியாத நாளாக மாற்றிய அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி, இணையதள, சமூக ஊடகங்கள், பண்பலை, நண்பர்களுக்கும், அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும், என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
எனது அன்பு ரசிகர்களான சகோதர, சகோதரிகள், சமூக ஊடகங்களில் அன்பையும் வாழ்த்துக்களையும் நிரப்பியதோடு, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல நலத்திட்டங்கள் செய்துள்ளனர்.