இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் மாறா ! தொடரும் அமேசான் சோகங்கள்!

Webdunia
சனி, 9 ஜனவரி 2021 (10:45 IST)
அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள மாறா திரைப்படம் குறித்து நெகட்டிவ்வான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

மாதவன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள மாறா என்ற படமும் தயாராக இருந்ததால் ஓடிடியில் ரிலிஸ் செய்யும் முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்தனர். இந்த படம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சார்லி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் நேற்று ஓடிடியில் ரிலீஸானது.

ஆனால் ரிலீஸானது முதலே எதிர்மறை விமர்சனங்களே வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதற்கு முக்கியக் காரணம் பலரும் படத்தை ஒரிஜினல் படத்தோடு ஒப்பிடுவதே என சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் தொடர்ந்து சொதப்பலான படங்களாகவே வாங்கி வெளியிட்டு வந்த நிலையில் சூரரைப் போற்று திரைப்படம் அவர்களுக்குக் கைகொடுத்தது. ஆனால் இப்போது மீண்டும் மொக்கப் படங்களாக ரிலீஸ் செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்